கோவில் உண்டியலில் பணத்தை கொள்ளையடித்த 3 பேர் கைது
கோவில் உண்டியலில் பணத்தை கொள்ளையடித்த 3 பேர் கைது
கோபிசெட்டிபாளையம் அடுத்த சிங்கிரிபாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதாக கடத்தூர் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார் அதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கொடரை பகுதியில் வாகன சோதனையின் போது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்த போது , உண்டியலில் பணத்தை கொள்ளையடித்தவர்கள் என தெரியவந்த்து. இதனையடுத்து திருப்பூர் பகுதியைச் சேர்ந்த பரணி , சேது, ஜயப்பன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து கொள்ளையடித்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
Tags
Next Story