பாபநாசம் அருகே சரக்கு வாகனத்தில் மணல் கடத்திய 3 பேர் கைது

பாபநாசம் அருகே சரக்கு வாகனத்தில் மணல் கடத்திய 3 பேர் கைது
மணல் கடத்திய வேன்
பாபநாசம் அருகே பண்டாரவாடையில் சரக்கு வாகனத்தில் 66 சிமெண்ட் சாக்கில் மணல் கடத்திய 3 பேர் கைது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் பாபநாசம் காவல் ஆய்வாளர் தியாகராஜன் ரோந்து பணியில் ஈடுபட்டார் அப்போது பண்டாரவாடை பஸ் ஸ்டாண்ட் அருகே சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தில் 66 சிமெண்ட் சாக்கில் மணலை குடமுருட்டி ஆற்றிலிருந்து ஏற்றிக் கொண்டு வந்தது தெரிய வந்தது 66 மணல் மூட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மணல் மூட்டை திருடிய காரணமாக இருந்த வங்காரம்பேட்டை பார்த்திபன் வயது 33 பண்டாரவாடை லட்சுமிபுரம் சுதன் வயது 21 திருப்பாலைத்துறை சதீஷ்குமார் வயது 40 ஆகிய 3 பேரையும் கைது செய்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார் நீதிபதி அப்துல் கனி 3பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்

Tags

Read MoreRead Less
Next Story