விழுப்புரம் பேருந்தில் 3கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது

விழுப்புரம் பேருந்தில் 3கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது

கஞ்சா கடத்தியவர்கள்

விழுப்புரம் அருகே அரசு பேருந்தில் 3 கிலோ கஞ்சா எடுத்து சென்ற நபர்களை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே அரசு பேருந்தில் 3 கிலோ கஞ்சா எடுத்து சென்ற நபர்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் மீனா தலமையிலான போலீசார் விக்கிரவாண்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் சோதனை செய்தபோது சுமார் 50ஆயிரம் மதிப்புள்ள 3.350 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனடியாக அதனை பேருந்தில் எடுத்துச் சென்ற 3 நபர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

விசாரணையில் அந்த 3 நபர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் கவரை தெருவை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் ரூதிஷ்(26), செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த முரளி மகன் தினேஷ்(27), கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த ஞானபாலன் மகள் வசந்தி(21) என தெரியவந்தது. மேலும் அந்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Tags

Next Story