துப்பாக்கி முனையில் காவலாளியை மிரட்டி மதுபானம் - 3 இளைஞர்கள் கைது.

துப்பாக்கி முனையில் காவலாளியை மிரட்டி மதுபானம் - 3 இளைஞர்கள் கைது.

துப்பாக்கி முனையில் காவலாளியை மிரட்டி மதுபானம் எடுத்து சென்ற இளைஞர்கள் கைது.

துப்பாக்கி முனையில் காவலாளியை மிரட்டி மதுபானம் எடுத்து சென்ற இளைஞர்கள் கைது.
கோவை க.க.சாவடியில் உள்ள டாஸ்மாக் பாரில் கடந்த இரு தினங்களுக்கு முன் மூன்று இளைஞர்கள் காவலாளியிடம் துப்பாக்கியை (ஏர்கன்) காட்டி மிரட்டி மதுபாட்டில்களை எடுத்து சென்றனர். இதுகுறித்து முருகப்பன் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யபட்டு மாவட்ட கண்காணிப்பாளர் பற்றி நாராயணன் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கபட்டு குற்றவாளிகளை தேடி வந்ததனா். இந்நிலையில் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த விபின் ஆரோக்கியம் (21), அர்ஜூன்(23), சுதேஷ் (21) ஆகிய 3 இளைஞர்களையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்த துப்பாக்கியை (ஏர்கன்) பறிமுதல் செய்ததுடன் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த குற்றச் சம்பவத்தில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை காவலர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்

Tags

Read MoreRead Less
Next Story