போதை பொருள் வைத்திருந்த 4 பேர் கைது

போதை பொருள் வைத்திருந்த 4 பேர் கைது

போதைப்பொருள் பறிமுதல்

நீலகிரியில் தடை செய்யப்பட்ட போதை பொருள் வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கக்கனல்லா சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டுருந்தனர். அப்போது மைசூரில் இருந்து கக்கனல்லா வழியாக வந்த போர்டு பிகோ KL 11, AY 2200 பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட 120 கிராம் எடை கொண்ட சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைபொருளை கொண்டு வந்த்து தெரிய வந்தது. மேற்ப்படி கேரளா மாநிலத்திலிருந்து வாகனத்தில் வந்த முனீர் (30) , பசீல் ஜமான்(26) , சையத் (21) , ஷாப்பாஸ் (26) ஆகிய நான்கு பேரையும் போலிசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story