விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 41 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 41 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

 சிலிண்டர்கள் பறிமுதல்

அருமனையில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 41 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட அருமனை பகுதியில் ஸ்ரீகுமார் என்பவரது வீட்டில் பாரத், இன்டேன், ஹச்.பி போன்ற முத்திரை பதித்த காலி கேஸ் சிலிண்டர்கள் வெளி மார்க்கெட்டில் விற்பளை செய்ய பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதாகுமாரி, வருவாய் ஆய்வாளர் ஜோதிஷ் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஸ்ரீகுமார் என்பவரின் வீட்டின் பின் பகுதியில் 41 காலி கேஸ் சிலிண்டர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து சிலிண்டர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் குழித்துறை ஹச். பி ஏஜென்சி இடம் அந்த காலி சிலிண்டர்களை ஒப்படைத்தனர். மேலும் சிலிண்டரை பதுக்கிய நபரை எச்சரித்து அனுப்பினர். தனிநபரிடம் 41 எரிவாயு சிலிண்டர் வரை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags

Next Story