ரப்பர் ஷீட் கடையில் 45 ஆயிரம் ரூபாய் திருட்டு

ரப்பர் ஷீட் கடையில் 45 ஆயிரம் ரூபாய் திருட்டு

காவல் நிலையம் 

மணியன்குழியில் கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 45 ஆயிரம் மற்றும் ரப்பர் ஷீட்டுகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள மணியன்குழி பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதர்.இவர் அந்தப் பகுதி யில் ரப்பர் ஷீட் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் தனது கடையை இரவு பூட்டி சென்றுள்ளார்.

நேற்று காலை கடை திறப்பதற்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டி ருந்தது. உள்ளே போய் பார்க்கும் போது மேசை யில் இருந்த ₹45 ஆயிரம் மற்றும் கடையில் இருந்த 45 ரப்பர் ஷீட், 200 கிலோ ஒட்டுப்பால் போன்றவை திருடப்பட்டிருந்தது. இது குறித்து அப்துல்காதர்பேச் சிப்பாறை காவல் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story