சத்தியமங்கலம் அருகே சிறுமியை கடத்தி திருமணம் 5 பேர் கைது

சத்தியமங்கலம் அருகே சிறுமியை கடத்தி திருமணம் 5 பேர் கைது

கோப்பு படம் 

சத்தியமங்கலம் அருகே சிறுமியை கடத்தி திருமணம் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சத்தியமங்கலம் அருகே உள்ள கொமாரபாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன் பெயரில் துணைபோலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீஸ் தனிப்படை அமைத்து சிறுமியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நெருஞ்சிப்பேட்டை சேர்ந்த கூலித் தொழிலாளியான காமராஜ் என்ற கருணா வயது 19 என்பவர் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று,

அவரை ஆம்பூர் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்ததும் தெரியவந்தது. அதை தொடர்ந்து அவரிடம் இருந்து சிறுமியும் மீட்டனர். இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கர்ணா அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஆம்பூரை சேர்ந்த சஞ்சய் 23 நெருஞ்சிப்பேட்டை சேர்ந்த சண்முகம் 45 அருண் 23 சந்துரு 23 ஆகியோரை கைது செய்தனர்.

Tags

Next Story