திருமருகலில் சாராயம் விற்ற 5 பேர் கைது - 110 லிட்டர் பறிமுதல்

திருமருகலில் சாராயம் விற்ற 5 பேர் கைது - 110 லிட்டர் பறிமுதல்

காவல் நிலையம் 

திருமருகல் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் சாராயம் விற்பனையை தடுக்கும் நடவடிக்கையில் திட்டச்சேரி மற்றும் திருக்கண்ணபுரம் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.அதன்படி திருமருகல் ஒன்றிய பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி ஆதலையூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த கோபால் மகன் சக்திவேல் (வயது 28),ஆதலையூர் கீரங்குடி குடியானத் தெரு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ் (வயது 43),திருப்புகலூர் மடவிளாகம் தெருவை சேர்ந்த வேணுதேவர் மகன் சின்னதுரை (வயது 54),பாக்கம்கோட்டூர் கீழத்தெரு பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் தினேஷ்குமார் (வயது 29),சடகோபமூலை பகுதியை சேர்ந்த வேதமுத்து மகன் ஜான்சன் (வயது 32) ஆகியோர் அப்பகுதிகளில் சாராயம் விற்றது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் படி போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தையும் கைப்பற்றினார்.

Tags

Next Story