சேலத்தில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருட்டு
சேலத்தில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருட்டு
சேலம் சித்தனூர் அடுத்துள்ள சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்தவர் வளர்மதி (வயது 62). இவர் உடல் நிலை சரி இல்லாததால் சேலம் 5 ரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்ற பிறகு 5 ரோட்டில் இருந்து தனியார் பஸ்சில் ஏறி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சர்க்கார் கொல்லப்பட்டிக்கு வந்ததும் பஸ்சில் இருந்து வளர்மதி இறங்கினார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை காணவில்லை. இதைக்கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அந்த பஸ்சில் தனக்கு பின்னால் இருந்த 2 பெண்கள் நகையை திருடி இருக்கலாம் என சந்தேகப்பட்டார். இதுதொடர்பாக இரும்பாலை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story