800 பாண்டிசேரி மதுபாட்டில்கள் பறிமுதல் - பதுக்கியவர் கைது

800 பாண்டிசேரி மதுபாட்டில்கள் பறிமுதல் - பதுக்கியவர் கைது

மாவட்ட காவல் அலுவலகம் 

மயிலாடுதுறை அருகே திருமுல்லைவாயல் பகுதியில் சட்டவிரோதமாக பாண்டிசேரி மதுபாட்டில்கள் பதுக்கியவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 800 மது பாட்டில்கள், 12 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்
சட்டவிரோதமாக பாண்டிசேரி மதுபாட்டில்கள் பதுக்கிய நபர் கைது, மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா அறிவுறுத்தல்களின்படி சட்டவிரோதமாக பாண்டி சாராயம், கஞ்சா, மது கடத்துதல் மற்றும் மது விற்பனை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதனை தொடர்ந்து நேற்று மதியம் சீர்காழி மதுவிலக்கு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சீர்காழி காவல் சரகம் திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த காந்திமதி என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது அவரது வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாண்டிசேரி மதுபாட்டில்கள் 800, பாண்டி சாராயம் 120லிட்டர் ஆகியவைகள் கைப்பற்றபட்டு, மேற்படி மதுபானங்களை பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்து, சீர்காழி மதுவிலக்கு பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டு நீதிமன்றகாவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும், சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

Tags

Next Story