வாகன சோதனையில் சிக்கிய 827 கிலோ குட்கா பொருட்கள்

வாகன சோதனையில் சிக்கிய 827 கிலோ குட்கா பொருட்கள்
புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருச்சுழி அருகே வாகன சோதனையில் கர்நாடகாவில் இருந்து மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட 827 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சுழி பகுதியில் கர்நாடகாவில் இருந்து சரக்கு வாகனத்தில் புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக திருச்சுழி துணை காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ம.ரெட்டியபட்டி போலீசார் கானா விலக்கு பகுதியில் அருப்புக்கோட்டை - சாயல்குடி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படியான வகையில் வந்த சரக்கு வாகனத்தை மடக்கி சோதித்ததில் அதில் சட்ட விரோதமாக மூடை மூடையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வருவது தெரிய வந்தது. இதனையடுத்து சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட 56 பெரிய சாக்கு மூடைகளில் இருந்த 827 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் பறிமுதல் செய்த போலீசார் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து அந்த சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த சரவணன்(46) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story