அரசு மருத்துவர் வீட்டில் 87 சவரன் நகை கொள்ளை

அரசு மருத்துவர் வீட்டில் 87 சவரன் நகை கொள்ளை
கொள்ளை நடந்த வீடு
நாகர்கோவிலில் அரசு மருத்துவர் வீட்டின் கதவை உடைத்து 87 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், நேசமணி நகர் பகுதி பிளசன்ட் நகரை சேர்ந்தவர் டாக்டர் கலைக்குமார் (52). இவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி டாக்டர் புனிதவதி (48). இவர் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டராக உள்ளார்.வாரம் ஒருமுறை இவர்கள் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். சனிக்கிழமை கலைக்குமார் மற்றும் புனிதவதியுமாக காரில் இரவு சுமார் 11 மணியளவில் நாகர்கோவிலுக்கு வந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை,பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் வீட்டிலிருந்து சுமார் 87 பவுன் தங்க நகைகள், 3 லட்சம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.இது தொடர்பாக நேசமணிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Tags

Next Story