வெள்ளறடை அருகே 8ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு

வெள்ளறடை அருகே 8ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு

இறந்த சிறுவன்

வெள்ளறடை அருகே 8 ம் வகுப்பு மாணவன் மர்மான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

வெள்ளறடை அருகே அம்பலம் பகுதியை சேர்ந்தவர் அருளானந்தகுமார். இவரது மனைவி ஷைனி. இவர்களது மகன் அகிலேஷ் குமார்.வாழிச்சல் பகுதியிலுள்ள பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலையில் அருளானந்த குமார் வீட்டின் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்றார்.

ஷைனியும் வெளியே சென்றிருந்தார். பள்ளி விடுமுறை என்பதால் அகிலேஷ் குமார் மட்டும் வீட்டில் இருந்தார்.காலை சுமார் 10 மணிக்கு அருளானந்தகு மார் வீட்டுக்கு வந்தார். மேல் மாடியிலுள்ள மகனின் அறையில் சென்று பார்த்தபோது, ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் அகிலேஷ்குமார் கிடந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்,தகவல் அறிந்து வெள்ளறடை போலீசார் வந்து விசாரணை நடத்தினர். சிறுவனின் இரண்டு கைகளும், பின் பக்கமாக ஜன்னல் கம்பியில் கட்டி வைத்த நிலையில் காணப்பட்டது.

துப்பட்டாவால் தூக்குப்போடப்பட்டுள் ளது. கைகள் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் தூக்கில் தொங்கியதை பார்த்தவர்கள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறினர்.விசாரணை நடத்திய போலீசார், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மர்மான முறையில் சிறுவன் இறந்த சம்பவம் கேரளா,குமரி எல்லை பகுதிகளில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story