குமரியில் 9½ கிலோ புகையிலை பறிமுதல்.

குமரியில் 9½ கிலோ புகையிலை பறிமுதல்.

குமரியில் உணவு பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனை9½ கிலோ புகையிலை பறிமுதல் செய்தனா்

குமரியில் 9½ கிலோ புகையிலை பறிமுதல்.

குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார் மேற்பார்வையில் கண்காணிப்பு குழுவினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். நாகர்கோவில் மாநகர பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 7 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட் டது. இதையடுத்து அந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. இதேபோல் தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம் பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா? அங்கு காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் சோதனை செய்தனர். மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 97 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 14 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 9½ கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags

Next Story