கொள்ளை சம்பவத்தில் 99.5% நகைகள் மீட்பு - துணை காவல் ஆணையர் தகவல்

கொள்ளை சம்பவத்தில் 99.5% நகைகள் மீட்பு - துணை காவல் ஆணையர் தகவல்

நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் 99.5% நகைகள் மீட்கபட்டுவிட்டது-துணை காவல் ஆணையர் தகவல்

நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் 99.5% நகைகள் மீட்கபட்டுவிட்டது-துணை காவல் ஆணையர் தகவல்

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த நவம்பர் 27 ம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற் றது.இது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியதில், தருமபுரியை சேர்ந்த விஜய் என்பவர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் கொள்ளையடிக்க திட்டமிடவும், தப்பிக்கவும் உதவிய விஜய்யின் மனைவி நர்மதா, நகைகளை மறைத்து வைத்த நர்மதாவின் தாய் யோகராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த விஜயை தனிப்படை காவல் துறையினர் சென்னையில் கைது செய்தனர்.

இது தொடர்பாக கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சந்தீஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த நவம்பர் 27 ம் தேதி இரவு ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடையில் 5.15 கிலோ நகைகள், வைரம், பிளாட்டினம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியின் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டு கைரேகை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தருமபுரியை சேர்ந்த விஜய் (26) இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. விஜய் மனைவி, மாமியார் ஆகியோரை கைது செய்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவான விஜய் தருமபுரி வனப்பகுதியில் மறைந்து இருந்ததால் அவரை பிடிக்க சிரம்ம ஏற்பட்டது. வனப்பகுதியில் பகுதியில் இருந்தவர் 3 நாட்களுக்கு பின் வெளியேறி சென்னை, திருப்பதி என மாறி மாறி பயணம் செய்துள்ளார். காளஹஸ்தி சென்ற விஜய் சபரி மலைக்கு மாலை அணிந்திருந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் சிம் கார்டு வாங்குவதற்கு ஒரு மொபைல் கடைக்கு வந்த போது விஜயை கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து 700 கிராம் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டதுடன், தர்மபுரியில் அவரது உறவினர் வீட்டில திருடிய 42 கிராம் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 5.15 கிலோ கொள்ளை போன நிலையில் 5.12 கிலோ மீட்கப்பட்டுள்ளதாக கூறிய துணை ஆணையாளர் 99.5 சதவீதம் நகைகள் மீட்கப்பட்டுள்ளது என்றார். தற்போதைய விசாரணை வரை கொள்ளைக்கு வெளி ஆட்கள் யாரும் உதவி செய்யவில்லை என தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் துணை காவல் ஆணையாளர் கூறினார். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க நகைக்கடையில் இரவு காவலில் 50 வயதிற்கு உட்பட்டவர்களை நியமிக்கவும், வைப்ரேசன் சென்சார் பொருத்த வேண்டும், இரவு நேரங்களில் நகைகளை லாக்கரில் வைக்கவும்,புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் நகைக்கடைகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக துணை காவல் ஆணையாளர் சந்தீஷ் தெரிவித்தார்.

Tags

Next Story