சாலையில் தீப்பற்றி எரிந்த கார்

சாலையில் தீப்பற்றி எரிந்த கார்

தீப்பற்றி எரிந்த கார்

ஓசூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, அலசநத்தம் பகுதியை சேர்ந்த மனோகர் பாபு(40) என்பவர் புதிய கட்டிடத்தில் கம்பி கட்டும் தொழிலை மேற்க்கொண்டு வருகிறார். அவரிடம் வேலை செய்யும் நபர்களை, அலசநத்தம் பகுதியிலிருந்து ஒசூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட மனோகர் பாபு உள்ளிட்ட 4 பேர் மாருதி - 800, காரில் வந்தபோது இராயக்கோட்டை மேம்பாலத்தின் அருகே நடுரோட்டில் டிரைவரின் கால் பகுதியில் வெப்பமாவதை உணர்ந்த மனோகர்பாபு உள்ளிட்டோர் காரிலிருந்து இறங்கி வெளியே வந்துள்ளனர். பின்னர் பானட்டில் புகை கிளம்பி மளமளவென தீப்பற்றி எரிந்து, கார் முழுமையாக நாசமானது..நடுரோட்டில் கார் பற்றி எரிந்ததை தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர் மாலை நேரம் என்பதால் பலரும் வீடு திரும்பும் முக்கிய சாலையில் இவ்விபத்து நடந்ததால் ஒருமணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story