கோழிக்கடை ஊழியர் உலக்கையால் அடித்துக் கொலை

கோழிக்கடை ஊழியர் உலக்கையால் அடித்துக் கொலை

கொலை வழக்கில் தொடர்புடையவர்கள்

கொல்லங்கோடு அருகே கோழி கடை ஊழியர் உலக்கையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

பாற்சாலை அருகே செங்கவிளை அயிரை அம்பிளிகோணம் பகுதியில் நேற்று காலை உடல் முழுதும் காயத்துடன் இறந்த நிலையில் ஒருவர் கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டு, பொழியூர் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் அங்கு சென்று உடலை கைப் பற்றி திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்து கிடந்தவர் குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வள்ளவிளை புதுவல் புத்தன்வீட்டை சேர்ந்த ஹனிபா மகன் முகமது அசீம் என்பதும் மேடவிளாகம் பகுதியில் ஒரு கோழி கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

இவருக்கும், அடைக்காக்குழி அருகே மங்குழி பகுதியை சேர்ந்த சமீர்கான் என்பவரது மனைவி ஜெனிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் முகமது அசின்,ஜெனிபர் வீட்டிற்கு சென்ற போது அங்கு முகமது அசீம் இருந்துள்ளார் அப்போது அவரை சமீர்கான் உலக்கையால் கடுமையாக தாக்கி உள்ளார்.

இதில், பலத்த காயத்துடன் நினைவிழந்த முகமது அசீமை சமீர்கான் அவரது மனைவி ஜெனிபா ஆகியோர் பைக்கில் கொண்டு சென்று அம்பிளிகோணம் பகுதியில் ரோட்டோரம் வீசி சென்று உள்ளார்.இது தொடர்பாக பொழியூர் போலீசார் சமீர்கான் மற்றும் அவரது மனைவி ஜெனிபா ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை நேற்று கைது செய்தனர்.

Tags

Next Story