டிராக்டர் ஓட்டிப் பழகிய கல்லூரி மாணவன் பலி

சேந்தமங்கலம் அடுத்தபெரிய பள்ளம்பாறையில் டிராக்டர் ஓட்டிப் பழகிய கல்லூரி மாணவன் பலி
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பெரிய பள்ளம்பாறையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சின்னம்மாள் தம்பதியரின் மகன் மாதேஸ்வரன் (18). இவர் நாமக்கல் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறை தினமான நேற்று இரவு 9.30 மணியளவில் இவர் தனது நண்பரின் புதிய டிராக்டரை எடுத்துக்கொண்டு, தனது வீட்டுக்கு அருகில் உள்ள அவரது நண்பர் தோட்டத்தில் தனியாக ஓட்டி பழகியுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிராக்டருக்கு அடியில் சிக்கிய கல்லூரி மாணவன் மாதேஸ்வரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து சேந்தமங்கலம் காவல் துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story