தாராபுரம் அருகே தேங்காய் மஞ்சி குடோனில் தீ விபத்து

தாராபுரம் அருகே தேங்காய் மஞ்சி குடோனில் தீ விபத்து

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

தாராபுரம் அருகே தேங்காய் மஞ்சி குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ரூ 80-லட்சம் மதிப்புள்ள தேங்காய் நார் மஞ்சி தீயில் எரிந்து சேதம் அடைந்தது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொட்டிக்காம்பாளையம் அருகே உள்ள தொட்டிபாளையம் கிராமத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ சரவணா காயர்ஸ் என்ற பெயரில் தேங்காய் நார் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. தேங்காய் மட்டையிலிருந்து மஞ்சை பிரித்தெடுத்து அதிலிருந்து பதப்படுத்தப்பட்ட தேங்காய் நாரை பிரித்தெடுத்து,

இயந்திரங்கள் மூலம் பண்டல்கள் ஆக இதன் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கேரளா மற்றும் நாகர்கோவில், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து தேங்காய் நார்களை விற்பனைக்காக கொண்டு செல்வது வழக்கம். இதனால் கடந்த ஒரு மாதமாக ரூ.80-லட்சம் மதிப்புள்ள தேங்காய் நார்கள் ஏற்றுமதிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மதியம் 1-மணி அளவில் தேங்காய் மஞ்சி அடுக்கி வைத்திருந்த பகுதியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவால் தேங்காய் மஞ்சியில் பற்றிய தீ மளமளவென்று கிடங்கு முழுவதும் பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியாத தொழிலாளர்கள் தாராபுரம் மற்றும் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 4-மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தேங்காய் மஞ்சி பண்டல்கள் அனைத்தும் முற்றிலுமாக தீயில் கருகி சேதமானது, தீ விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story