ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியை வீடு புகுந்து தாக்கிய கும்பல்

ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியை வீடு புகுந்து தாக்கிய கும்பல்

காவல் நிலையம்

திருவட்டார் அருகே பால் வெட்டும் தொழிலாளியை வீடு புகுந்து தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவட்டார் புத்தன்கடை பகுதியை சேர்ந்தவர் ராஜன் .பால் வெட்டும் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ஜினோ. இவருக்கு திருமணம் ஆகி மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றதாக தெரிகிறது

.சம்பவத்தன்று ஜினோ மற்றும் புத்தன்கடை பிலாங்கன்று விளை பகுதியை சேர்ந்த லடிஸ் மற்றும் கண்டால்தெரியும் ஒரு நபரும் சேர்ந்து ராஜன் வீட்டில்அத்துமீறி நுழைந்து அவரை தாக்கியுள்ளனர். இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதனால் ராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றனர்.

தாக்குதலில் படுகாயம் அடைந்த ராஜனை மீட்டு மார்த்தாண்டம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராஜன் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தார். அதன்பேரில் போலீசார் ஜினோ, லடிஸ், உள்ளிட்ட 3 பேர் மீது இன்று வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story