சிறையிலிருந்து ஜாமீனில் வந்த தொழிலாளி திடீர் சாவு

சிறையிலிருந்து ஜாமீனில் வந்த தொழிலாளி திடீர் சாவு

சிறையிலிருந்து ஜாமீனில் வந்த தொழிலாளி திடீர் சாவு - இரணியல் போலீஸ் விசாரணை

சிறையிலிருந்து ஜாமீனில் வந்த தொழிலாளி திடீர் சாவு - இரணியல் போலீஸ் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதி வர்த்தக நாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (43). கூலி தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 25ஆம் தேதி கதிரவன் எதிர்பாராத விதமாக வீட்டிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் ஆலோசனையின் பேரில் சிகிச்சை எடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை கதிரவனுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரது தாயார் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் கதிரவன் பரிதாபமாக இறந்தார். இறந்த கதிரவன் மீது அவரது அண்ணனை கொலை செய்த வழக்கு தொடர்பாக கைதாகி, ஜெயிலில் இருந்து கதிரவன் ஜாமினில் வெளிய வந்திருந்தார். இந்த நிலையில் தான் அவர் திடீர் என இறந்துள்ளார். இது குறித்து கதிரவன் தாயார் வேலம்மாள் இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story