கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் புதிய உண்டியல் அமைக்கப்பட்டது

கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் புதிய உண்டியல் அமைக்கப்பட்டது

பள்ளிபாளையம் கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் புதிதாக பாதுகாப்பு அம்சங்களுடன் உண்டியல் அமைக்கப்பட்டது

பள்ளிபாளையம் கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் புதிதாக பாதுகாப்பு அம்சங்களுடன் உண்டியல் அமைக்கப்பட்டது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காகித ஆலை செல்லும் சாலையில், கண்ணனூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் இந்த கோவிலின் உண்டியலை உடைத்து, மர்ம நபர்கள் அதிலிருந்து பணம் நகையை கொள்ளையடித்து சென்ற நிலையில், தொடர்ந்து இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்து அறநிலை துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் புதிதாக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. செயல் அலுவலர் கீதா, ஆய்வாளர் வடிவுக்கரசி ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் பொருத்தப்பட்டது.. உண்டியலை யாராவது தொட்டாலோ ,அல்லது திறக்க முயற்சித்தாலோ, ஒலியெழுப்பும் வகையில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. ஐந்து பூட்டுகள் அமைக்கப்பட்டு 5 பூட்டையும் திறந்தால் மட்டுமே உண்டியல் திறக்கும் வகையில் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது....

Tags

Next Story