அரிவாளல் வெட்டிய நபர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

அரிவாளல் வெட்டிய நபர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

வெப்படை அருகே முன் விரோதம் காரணமாக அரிவாளல் வெட்டிய நபர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

வெப்படை அருகே முன் விரோதம் காரணமாக அரிவாளல் வெட்டிய நபர் குண்டர் சட்டத்தில் அடைப்பு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியைச் சேர்ந்தவர் கௌரிசங்கர். இவர் எழந்த குட்டை பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் 26 ம் தேதி நிதி நிறுவனத்தில் இருந்த பொழுது மாலை சுமார் 6 மணி அளவில் அவரது நிதி நிறுவனத்திற்கு வந்த சின்னார்பாளையத்தைச் சேர்ந்த கௌரிசங்கர் என்பவர் நிதி நிறுவன உரிமையாளர் கௌரிசங்கரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளார். வெட்டுப்பட்ட கௌரிசங்கர் அலறல்சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதை கண்ட சின்னார்பாளையம் கௌரிசங்கர் ஓடி அங்கிருந்து தலைமறைவானார். இது குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சுகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து சின்னார்பாளையம் கௌரிசங்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தற்பொழுது நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story