டிக்கெட் பரிசோதகரை பிடிக்க பெங்களூரு விரைந்த தனிப்படை

டிக்கெட் பரிசோதகரை பிடிக்க பெங்களூரு விரைந்த தனிப்படை

சேலம் ரயில் நிலையம் 

ரெயிலில் மாணவியிடம் சில்மிஷம் செய்த டிக்கெட் பரிசோதகரை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர்.

கேரள மாநிலம் செங்கனூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கர்நாடக மாநிலம் பனஸ்வாடியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று கேரளா செல்வதற்காக பெங்களூருவில் இருந்து, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினார். அப்போது அந்த மாணவி முன்பதிவு இல்லாத டிக்கெட், எடுத்து முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறி அமர்ந்து இருந்தது தெரிந்தது.

இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் அந்த மாணவியை 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிக்கு அழைத்து சென்று உள்ளார். பின்னர் திடீரென மாணவியிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிடவே பயணிகள் விரைந்து வந்தனர். டிக்கெட் பரிசோதகர் சேலம் ரெயில் நிலையத்தில் இறங்கி தப்பியோடி விட்டார். இதுகுறித்து மாணவி சேலம் ரெயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் பெங்களூரு சென்று இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்து உள்ளனர்.

Tags

Next Story