மாமியாருடன் கள்ளத்தொடர்பு - நண்பரை அடித்துக் கொல்ல முயன்ற வாலிபர்.

மாமியாருடன் கள்ளத்தொடர்பு - நண்பரை அடித்துக் கொல்ல முயன்ற வாலிபர்.

கவுதம்

மாமியாருடன் கள்ளத்தொடர்பில் இருந்த நண்பரை சுத்தியலால் அடித்து கொல்ல முயன்ற வாலிபர் புதுச்சேரி போலீசில் சரணடைந்தார்.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகேயுள்ள மொரட்டாண்டி சனிஸ்வர பகவான் கோவில் அருகில் வசிப்பவர் துரைசாமி மகன் கோபி, 26; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதே மொரடாண்டி காலனி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகர் மகன் கவுதம், 22 வெல்டிங் வேலை செய்து வருகிறார். இருவரும் நண்பர்கள். இந்நிலையில் நேற்று இரவு கோபி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த கவுதம், கோபியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து விட்டு திரும்பியபோது, கவுதம் தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலால், கோபியை தலையில் பின்பக்கமாக பலமுறை அடித்துள்ளார். அதில் வீட்டு வாசலில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கோபி சரிந்தார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள், ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு சென்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த கோபியை மீட்டு, சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், கவுதமின் மாமியாரான அதே பகுதியை சேர்ந்த இரவு ஓட்டல் நடத்தி வரும், சசிகலா, 40 என்பவருக்கும், திருமணமாகாத கோபிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த கவுதம், கோபியிடம் பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால், அவர்களின் கள்ளத்தொடர்பு நீடித்ததால், ஆத்திமடைந்த கவுதம், கோபியை அடித்து கொலை செய்ய முயற்சித்தது தெரிய வந்தது. பலத்த காயமடைந்த கோபிக்கு, மருத்துவமனயில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கவுதம், புதுச்சேரி தன்வந்தரி நகர் போலீசில் சரணடைந்தார். இந்த சம்பவம் குறித்து ஆரோவில் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, சரணடைந்த கவுதமை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story