கும்பகோணம் அருகே வாலிபரை கொலை செய்து எரித்து புதைப்பு

கும்பகோணம் அருகே வாலிபரை கொலை  செய்து எரித்து புதைப்பு

கொலை செய்யப்பட்ட வாலிபர்

கும்பகோணம் அருகே வாலிபரை கொலை செய்து உடலை எரித்து புதைத்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே சோழபுரம் அய்யாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கோகுல் (24). இவர் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி இரவு நேர பணிக்காக சென்ற அவர் கடைக்கு செல்லவில்லை என வீட்டிற்கு தகவல் வந்துள்ளது‌. பின்னர் மறுநாள் காலை வரை கோகுல் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால்,

சோழபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் கோகுலை தேடிவந்தனர். அப்போது கோகுல் கடைசியாக பேசிய அவரது நண்பர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரித்த போது, அவர்கள் கோகுலை கொலை செய்து எரித்து புதைள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கொலை செய்து எரித்த இடத்தை அடையாளம் காட்ட வைத்து, அந்த இடத்தில் தோண்டி உடலை எடுத்துள்ளனர். மேலும் புகார் அளித்த பெற்றோரை வரவழைத்து உடலை அடையாளம் காட்டி உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையில் காவல்துறையினர் பார்வையிட்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் தஞ்சாவூரில் இருந்து மோப்பநாய் மற்றும் தடவியல் துறையினர் மோப்பநாய் உதவியுடன் சுடுகாட்டில் சோதனை செய்து வருகின்றனர்.

Tags

Next Story