முதியவரை தாக்கி திருட முயன்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது.

முதியவரை தாக்கி திருட முயன்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது.

ஆற்காடு அருகே முதியவரை தாக்கி திருட முயன்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது. 

ஆற்காடு அருகே முதியவரை தாக்கி திருட முயன்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு கஸ்பா பகுதியை சேர்ந்தவர் ரவி வயது (60) இவர் ஆற்காடு வேலூர் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள தனியார் கடையில் இரவு காவலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அந்த கடை அருகில் கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி இரவு வந்த இரண்டு பேர் அந்த முதியவரிடம் பையை பறிக்க முயன்றனர்.. அப்போது சுதாரித்து கொண்டு எழுந்த அந்த முதியவரிடம் பையை கொடுக்கவில்லை என்றால் உன்னை ஒய்த்து விடுவோம் என கூறி ஆபாச வார்த்தைகளால் பேசியதோடு கை வளையம் மற்றும் கல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.. இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் வேலூர் அடுத்த வசந்தபுரத்தை சேர்ந்த அஜித்குமார் வயது (27) என்பவர் உள்பட இரண்டு பேரையும் கைது செய்து ஆற்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.. மேலும் கைது செய்துள்ள அஜித்குமார் மீது ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவின் படி குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவினை வழங்கினார்..

Tags

Read MoreRead Less
Next Story