ஸ்டூடியோவில் கேமரா திருடிய வாலிபர் கைது
திருச்செங்கோடு அருகே ஸ்டூடியோவில் கேமரா திருடிய வாலிபர் கைது
திருச்செங் கோடு அருகே, கூட் டப்பள்ளி வேளாளர் காலனியில் ஸ்டூடியோ நடத்தி வருபவர் நந்தகிருஷ்ணன் (29). கடந்த சில நாட் களுக்கு முன், நள்ளிரவில் இவரது ஸ்டூடியோவுக்குள் நுழைந்த மர்ம நபர், விலை உயர்ந்த 2 கேமராக்கள், பேட்டரிகளை திருடிச் சென்றனர். இது குறித்து நந்தகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், திருச் செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம், ஈரோட்டில் உள்ள போட்டோ கடை ஒன்றுக்கு வந்த வாலிபர், கேமராக்களை விற்க முயன் றுள்ளார். அவர் மீது சந்தேகமடைந்த அவர்கள் இதுகுறித்து திருச்செங் கோடு போட்டோ சங்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நந்தகிருஷ்ணன், போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருடனை மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவரை திருச்செங்கோடு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத் தினர் .
விசாரணை யில் பிடிபட்ட வாலிபர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் லக்கிநாய்க்கன்பட்டியை சேர்ந்த ரஷீத் (21) என்பது தெரிய வந்தது. லாரி டிரைவரான இவர் மீது சேலம், திரு வண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர், விழுப்புரம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 20 க்கும் மேற் பட்ட திருட்டு மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, ரஷீத்திடம் இருந்து கேமராக்கள் மற்றும் பேட்டரிகளை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை திருச் செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி சுரேஷ்பாபு உத்தரவின் படி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.