ஆம்புலன்ஸ் உரிமையாளர் கொலை - கைதானவர் மீது குண்டர் சட்டம்
பைல் படம்
திருச்சி வள்ளுவர் நகரைச் சேர்ந்த பிரபு என்கின்ற பிரபாகரன் தனியார் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வந்தார். பிரபாகரன் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.சிறை சென்ற பிரபாகரன் நிபந்தனை பிணையில் வெளியே வந்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்த பிரபாகரனை கடந்த 11.12.23 ந்தேதி, நான்கு பேர் முகமூடி அணிந்து கொண்டு அவரது அலுவலகத்திற்குள் நுழைந்து சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
மேலும் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக இவரிடம் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் அரியமங்கலத்தை சேர்ந்த ரவுடி அப்பு (எ) ஹரி கிருஷ்ணன், என்பவருக்கும் பிரபாகரன்க்கும் இருந்த தொழில் போட்டியால் 4 நபர்களை வைத்து கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது, இந்த வழக்கில் அப்பு மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்டனர் .
மேலும், விசாரணையில் அப்பு (எ) ஹரி கிருஷ்ணன் மீது அரியமங்கலம் காவல்நிலையத்தில் ஆயுதத்தை காண்பித்து பணத்தை கொள்ளையடித்ததாக 7 வழக்குகளும், தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக 2 வழக்கு உட்பட 16 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.மேலும் அப்பு தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு மாநகர காவல் ஆணையர் காமினி, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து அப்பு குண்டர் தடுப்பு சட்டம் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.