கடையால் அருகே பைக் நிலை தடுமாறி ஓடையில் கவிழ்ந்து விபத்து

கடையால் அருகே பைக் நிலை தடுமாறி ஓடையில் கவிழ்ந்து விபத்து

விபத்தில் சிக்கியவர்

கடையால் அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி ஓடையில் கவிழ்ந்த விபத்தில் கால் முடிவு ஏற்பட்டு தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுவெந்நி பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ். தொழிலாளி.இவர் தனது இருசக்கர வாகனத்தில் கடையால் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார் அப்போது சிற்றாற்றின்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோரம் இருந்த வடிகால் ஓடையின் உள்பகுதிக்கு சென்றது.

இதில் நிலை தடுமாறி விழுந்த ஞானதாசின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஞான தாஸ் கூச்சலிடவே அவரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மார்த்தாண்டம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story