வேலூரில் நடைபயிற்சி சென்ற நர்சிடம் சங்கிலி பறிக்க முயற்சி

வேலூரில் நடைபயிற்சி சென்ற நர்சிடம் சங்கிலி பறிக்க முயற்சி

காவல் நிலையம்

பாகாயம் அருகே நடைபயிற்சி சென்ற நர்சிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் பாகாயம் விருப்பாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கமலி (30). இவர் பாகாயத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் அப்பகுதியில் நடைபயிற்சி செல்வார் என்று கூறப்படுகிறது. இவர், கமலி வழக்கமாக தனது நடை பயிற்சிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த வடமாநில வாலிபர் ஒருவர் கமலியின் கழுத்தில் இருந்த சங்கிலியைப் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த அவர் திருடன்.. திருடன்.. எனக் கத்தி கூச்சலிட்டுள்ளார். அவரின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வடமாநில வாலிபரை கையும் களவுமாக பிடித்து சரமாரியாக தாக்கி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

பாகாயம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வடமாநில வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அமர் (35) என்பது தெரிய வந்தது. அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. அவரை போலீசார் மேல் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் வடமாநில வாலிபர் சங்கிலி பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story