அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலி
விபத்து
வளவனூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அடுத்துள்ள சொர்ணாவூர் கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சுந்தரமூர்த்தி(61) விவசாய தொழிலாளி. இவர், தனது மகள் மஞ்சுளா வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் பிற்பகல், வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர், கலிஞ்சிக்குப்பம்–மடுகரை சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்துகிடந்துள்ளார். இது குறித்து, அவரது மகள் மஞ்சுளா அளித்த புகாரின் பேரில், வளவனூர் போலீசார் விரைந்து சென்று, சுந்தரமூர்த்தியின் உடலை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும், சம்பவம் குறித்து வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story