ஏலகிரி மலை அடிவாரம் வனப்பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

ஏலகிரி மலை அடிவாரப் பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை அடிவார வனப்பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் ஆண் சடலும் இருப்பதை கண்டு பகுதி மக்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் சென்னை ஆவடியை சேர்ந்த வேலு என்பவர் இவர் ஒரு மாதங்களுக்கு முன்பு இவருக்கும் இவரது மனைவிக்கும்விவாகரத்தான நிலையில் வீட்டைவிட்டு வெளியேறி ஏலகிரி மலை மற்றும் ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதியில் சுற்றி திரிந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வேலு ஏலகிரி மலை அடிவார வனப்பகுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது ஜோலார்பேட்டை காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

Tags

Next Story