ஆந்திர கொள்ளை கும்பல் அதிரடி கைது

ஆந்திர கொள்ளை கும்பல்  அதிரடி கைது
கொள்ளை கும்பல்  கைது
கிராம பகுதிகளில் கேஸ் ரிப்பேர், தலைமுடி வாங்குவது போல் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் ஆந்திராவை சேர்ந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் காவல் நிலைய உட்கோட்டத்தில் அடங்கிய பகுதிகளில் கேஸ், சிலிண்டர் அடுப்பு ரிப்பேர் செய்வது தலைமுடி வாங்குவதாக கோரி வீடுகளை நோட்டமிட்டு ஆளில்லாத சமயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் மதுராந்தகம் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியின்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

இவர்களிடம் விசாரணை செய்ததில் இவர்கள் ஆந்திர மாநிலம், காலஸ்திரி பகுதியை சேர்ந்த துர்கா பிரசாத் 24, விக்கி 22, பிரகாஷ் 22 ஆகியோர் கடந்த ஆறு மாதங்களாக மதுராந்தகம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் பகல் நேரத்தில் கேஸ் அடுப்பு ரிப்பேர் செய்வது போலவும் தலைமுடி வாங்குவது போலவும் 8 ஆள்ளாத வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் மதுராந்தகம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட செங்குந்தர் பேட்டை, வன்னியர் பேட்டை ஆகிய பகுதிகளில் கொள்ளை அடித்ததை இவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 8 சவரன் நகை,அரை கிலோ வெள்ளி பறிமுதல் செய்தனர். பின்னர் கொள்ளை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story