தொழிலாளியை முகத்தில் கல்லால் தாக்கி கொலை செய்தவர் கைது

தொழிலாளியை முகத்தில் கல்லால் தாக்கி கொலை செய்தவர் கைது

டென்னிஸ்

கருங்கல் பேருந்து நிலையத்தில் தொழிலாளியை முகத்தில் கல்லால் தாக்கி கொலை செய்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பரமார்த்தபுரம் பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ஸ்டான்லி (வயது 44), தொழிலாளி. இவருக்கு மது பழக்கம் இருந்ததால், மனைவி ஷீலா, தனது குழந்தையுடன் கணவரை பிரிந்து சென்று விட்டார்.அதன்பிறகு தனியாக வசித்து வந்த மெர்லின் ஸ்டான்லி, வீதிகளில் கிடக்கும் மது பாட்டில்களை சேகரித்து டாஸ்மாக் கடையில் கொடுத்து மது அருந்தி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர், கருங்கல் பஸ் நிலையத்தில் முகம் சிதைந்த நிலையில் ரத்தக் காயங்களுடன் கிடந்தார். அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மெர்லின் ஸ்டான்லி பரிதாபமாக நேற்று காலை இறந்தார். இது குறித்து கருங்கல் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சுவாமியார்மடம் பகுதியை சேர்ந்த டென்னிஸ் மெர்லின் ஸ்டான்லியை கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் டென்னிசை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை இன்று சிறைச்சாலையில் அடைத்தனர்.

Tags

Next Story