அம்பலகலையில் வழக்கை வாபஸ் பெற கோரி பெண் மீது தாக்குதல்

அம்பலகலையில் வழக்கை வாபஸ் பெற கோரி பெண் மீது தாக்குதல்

தாக்குதலில் காயமடைந்த பெண்

அம்பலகாலை பகுதியில் வழக்கை வாபஸ் பெற கேட்டு பெண் மீது இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாங்கோடு அம்பலக்காலை பகுதியை சேர்ந்தவர் ஜெயன்.இவரது மனைவி சாந்தி குமாரி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் பிரமோத், சபிதா. சூரியா, விஜி, கவிதா.

இவர்களுக்கும், சாந்தி குமாரிக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் கடந்த பிப்ரவரி 10 ம் தேதி, சாந்திகுமாரிக்கும், பிரமோத், சபிதா, சூரியா, விஜி, கவிதா ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேரும் சேர்ந்து சாந்தி குமாரியை சரமாரி யாக தாக்கியதாக கூறப்ப டுகிறது. இதில் காயமடைந்த அவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதுதொடர்பாக அவர் அருமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அந்த வழக்கை வாபஸ் பெறும்படி சிலர் சாந்தி குமாரியை மிரட்டி வந்துள்ளனர். ஆனால் அவர் ஒத்து கொள்ளவில்லை. இந்நிலையில் சாந்தி குமாரி குழாயில் தண்ணீர் எடுத்து கொண்டி ருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் தகாத வார்த்தைகள் பேசி சாந்திகுமாரியை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சாந்தி குமாரி அருமனை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story