கபிஸ்தலத்தில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் பெண்ணிடம் கைவரிசை

கபிஸ்தலத்தில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் பெண்ணிடம் கைவரிசை

கோப்பு படம் 

கபிஸ்தலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தமர்ம நபர்கள் பெண்ணிடம் கைவரிசை காட்டியுள்ளனர்

கபிஸ்தலம் அருகே உள்ள ராமானுஜபுரம் ஊராட்சி, கோவில் பத்து பகுதியில் குடியானத் தெருவில் வசிக்கும் வேலுசாமி இவர் கொத்தனார் வேலை பார்க்கிறார். இவரது மனைவி அகிலா வயது 38, இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் அகிலாவின் அக்கா அரியலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக அகிலாவும் அவரது கணவர் வேலுசாமியும் இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டு கபிஸ்தலம் வழியாக சென்ற பொழுது அவர்களை,

பின்தொடர்ந்து இரண்டு சக்கர வாகனத்தில் வந்த கருப்பு சட்டை அணிந்த இரண்டு மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்னே உட்கார்ந்து வந்த அகிலாவின் கையில் இருந்த பேக்கை பறித்துக் கொண்டு கண் சிமிட்டும் நேரத்தில் தப்பி ஓடிவிட்டார்கள். அதிர்ச்சி அடைந்த அகிலா உடனடியாக கபிஸ்தலம் காவல்நிலத்தில் புகார் செய்தார். புகாரில் அவர் வைத்திருந்த பேக்கில் போய் 27 ஆயிரம் மதிப்பு உடைய ஆண்ட்ராய்டு செல்போன், மற்றும் ரூபாய் 10000 பணம், ஏடிஎம் கார்டு, வாக்களிக்கும் ஓட்டர் ஐடி,

ஆகியவை இருந்ததாக தெரிவித்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகதாஸ், தலைமை காவலர் கார்த்தி, ஆகியோர் வழக்கு பதிவு செய்து பெண்ணிடமிருந்து பேக்கை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகிறார்கள். கபிஸ்தலம் பாலக்கரை பகுதியில் நடந்த இந்த சம்பவம் இந்த பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags

Next Story