விராலிமலை அருகே தம்பதி மீது தாக்குதல்

விராலிமலை அருகே தம்பதி மீது தாக்குதல்

காவல் நிலையம் 

விராலிமலை அருகே தம்பதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விராலிமலை ஒன்றியம் ஆவூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன் சுரேஷ் (47). இவர் வீட்டின் அருகே காலி இடம்உள்ளது. இதை அதே பகுதியை சேர்ந்த தங்கையா (எ) தனிஸ்லாஸ் ஆக்கிரமிக்க வேலி அமைக்க முயன்றாராம்.

இதை ஸ்டீபன் சுரேஷ், அவர் மனைவி காந்தி மேரி ஆகியோர் தட்டிக் கேட்டனர். அவர்கள் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. தங்கையா, அவர் மனைவி மரியகொரற்றி, தம்பி அம்புரோஸ் மைத்துனர் ரூபன் ஆகியோர் ஸ்டீபன் சுரேஷ் தம்பதியை தாக்கினர்.

இது குறித்த புகாரின் பேரில் மாத்தூர் சப் இன்ஸ்பெக் டர் கனகராஜ் வழக்கு விசாரணை நடத்தினார்.

Tags

Next Story