நித்திரவிளை அருகே முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல்

நித்திரவிளை அருகே  முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல்

காவல் நிலையம் 

நித்திரவிளை அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நித்திரவிளை அருகே ஆற்றுப்புறம் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ்.இவருக்கும், வாழவிளை பகுதியை சேர்ந்த ரிதீஷ் மற்றும் பாலமடம் பகுதியை சேர்ந்த அஜித் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று மைக்கேல் ராஜை அவர்கள் இருவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து மைக்கேல்ராஜ் நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story