சாலையோரம் நின்ற பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி.

சாலையோரம் நின்ற பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி.

சாலையோரம் நின்ற பெண்ணின் நகை பறிக்க முயற்சி.

கருங்கல் சாலையோரம் நின்ற பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி.
குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூர் பகுதி வாழைத்தோட்டம் என்ற இடத்தை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி ஷாஜினி (34). ஜெயக்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்கள் மூத்த மகள் ஜெஸ்னி என்பவர் கருங்கலில் ஒரு தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார். தினமும் மகளை பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு அனுப்புவது வழக்கம். அதன்படி நேற்று மாலை பள்ளி சென்ற மகளை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஷாஜினி குழித்தோட்டம் என்ற பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் ஷாஜினியின் அருகில் வந்து, கழுத்தில் கிடந்த ஒன்பது பவுன் நகையை பறிக்க முயன்றனர். இதில் நிலை தடுமாறு கீழே விழுந்த ஷாஜினிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனாலும் சுதாரித்துக் கொண்டு நகையை பறிக்கவிடாமல் இறுக பிடித்துக்கொண்டு திருடன் திருடன் என சத்தம் போட்டார். இதை அடுத்து அந்த மர்ம நபர்கள் நகையை பறிக்கும் முயற்சியை கைவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story