மனைவியின் தங்கையை கர்பமாக்கிய வங்கி ஊழியர் போக்சோவில் கைது
கைது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பில்பருத்தி பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபர் தனியார் வங்கி ஒன்றில் கடன் தொகை வசூலிக்கும் ஊழியராக உள்ளார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவியுடன் அந்த நபர் குடும்பம் நடத்தி வந்தார். இதற்கிடையே அக்காள் மாப்பிள்ளையுடன், கொழுந்தியாளான 16 வயதான பாலிடெக்னிக் மாணவி எந்தவித வேறுபாடும் இல்லாமல் பழகினார். இதற்கிடையே அந்த ஊழியரின் மனைவி கர்ப்பம் ஆனார்.
மனைவி கர்ப்பமான பிறகு அந்த நபரின் மோக பார்வை, கொழுந்தியாள் மீது விழுந்தது. கொழுந்தியாளிடம் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்துள்ளார். வங்கி ஊழியரின் விபரீத எண்ணம் தெரியாத அந்த 16 வயது சிறுமி அக்காள் மாப்பிள்ளையின் மோக வலையில் விழுந்தார். ஆட்கள் இல்லாத நேரத்தில் வனப்பகுதிக்கு சிறுமியை அழைத்து சென்று உணர்வை தூண்டி விட்டு உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனால் அவர் கர்ப்பம் அடைந்தார். பெற்றோர் அழைத்து கேட்ட போதும் சொல்ல மறுத்த சிறுமி ஒரு கட்டத்தில் கர்ப்பத்துக்கு காரணம் அக்காள் மாப்பிள்ளைதான் என குண்டை தூக்கி போட்டார். இதைத்தொடர்ந்து மகளுக்கு ஆறுதல் கூறிய பெற்றோர் சிகிச்சைக்காக அவளை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். கொழுந்தியாளை அனுபவித்த அக்காள் மாப்பிள்ளையோ தலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அந்த தனியார் வங்கி ஊழியரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.