சேலம் கோட்டை பகுதியில் பைக் திருட்டு

X
சேலம் கோட்டை பகுதியில் பைக் திருட்டு
சேலம் கோட்டை பகுதியில் பைக் திருட்டு
சேலம் அழகாபுரம் பெரிய புதூர் சத்யா நகரை சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி சரவணகுமாரி (31). இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் சேலம் கோட்டை பெருமாள் கோயில் பகுதிக்கு வந்து, பைக்கை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. மர்மநபர் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுபற்றி டவுன் குற்றப்பிரிவு போலீசில் சரவணகுமாரி புகார் கொடுத்தார். சிறப்பு எஸ்ஐ அன்பு விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து, அந்த பைக்கை திருடிச் சென்ற மர்மநபர் குறித்து விசாரித்து வருகிறார்.
Tags
Next Story