பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை - பாஜக பிரமுகர் கைது

பெண் மருத்துவருக்கு  பாலியல் தொல்லை -  பாஜக பிரமுகர் கைது

நாஞ்சில் ஜெயக்குமார் 

நாகர்கோவிலில் பெண் பல் மருத்துவரின் படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டி பாலியல் தொல்லை தந்த பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் நாஞ்சில் ஜெயக்குமார் (50) . பாரதிய ஜனதா பிரமுகர். இவர் பலரிடம் வேலை வாங்கி தருவதாக பல லட்ச ரூபாய் மோசடி செய்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் வெளியே வந்தார். இந்த நிலையில் நாஞ்சில் ஜெயக்குமார் சமீபத்தில் நாகர்கோவில் உள்ள ஒரு பல் மருத்துவமனைக்கு சிகிச்சை சென்று, அங்கிருந்த பெண் டாக்டரிடம் மிகவும் ஆபாசமான முறையில் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த டாக்டரின் புகைப்படத்தை மார்பிங் செய்து தனது செல்போனில் வைத்து இருப்பதாகவும், ஆசைக்கணங்க மறுத்தால் இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, நாஞ்சில் ஜெயக்குமாரை கைது செய்தனர்.

Tags

Next Story