குமரி : கிறிஸ்தவ ஆலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

குமரி : கிறிஸ்தவ ஆலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
பைல் படம்
குளச்சல் ஜும்மா பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்த நிலையில், சின்ன முட்டம் கிறிஸ்துவ தேவாலயத்திற்கும் மிரட்டல் கடிதம் வந்ததால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கன்னியாகுமரி சின்ன முட்டம் பகுதியில் ஆர் சி கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. சம்பவ தினம் இந்த தேவாலய முகவரிக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில் பெயர், ஊர் குறிப்பிடாத நிலையில், சம்பந்தப்பட்ட தேவாலயத்திற்கு பட்டா நிலம் இல்லை எனவே அதை உடனே வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும். அப்படி இடமாற்றம் செய்யாவிட்டால் தேவாலயத்தை வெடிகுண்டு வைத்து தரைமட்டம் ஆக்கி விடுவேன். என மிரட்டல் வாசகம் இடம் பெற்றிருந்தது.

இது தொடர்பாக சின்ன முட்டம் பங்கு பேரவை என் செயலாளர் ஜோசப் ஆண்டனி என்பவர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் அந்த மிரட்டல் கடிதத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். நேற்று குளச்சல் ஜும்மா பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மட்டுமல்லாது கன்னியாகுமரியில் உள்ள ஒரு சில இந்து கோயில்களுக்கும் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல்கள் கடிதம் வந்ததாக கூறப்படுகிறது. இதை யாரேனும் பரபரப்புக்காக மிரட்டல் கடிதம் அனுப்புகிறார்களா? அல்லது நாச வேலை கும்பல் சதி செய்கிறார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி உள்ளனர்.

Tags

Next Story