வீட்டின் கதவை திறந்து 2 1/2 பவுன் தங்கநகை திருட்டு.

வீட்டின் கதவை திறந்து 2 1/2 பவுன் தங்கநகை திருட்டு.

பூட்டி இருந்த வீட்டின் கதவை திறந்து 2 1/2 பவுன் தங்க நகை திருட்டு.

பூட்டி இருந்த வீட்டின் கதவை திறந்து 2 1/2 பவுன் தங்க நகை திருட்டு.
கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, காக்காவடி பகுதியைச் சேர்ந்தவர், மறைந்த அன்பரசன் மனைவி நவமணி வயது 52 . இவர் அப்பகுதியில் விவசாய பணி செய்து வருகிறார். இந்நிலையில், டிசம்பர் 4ஆம் தேதி காலை 8:15 மணியளவில், வெளியே செல்வதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர், பணி முடித்து வீடு திரும்பும் போது, அவருடைய வீட்டின் கதவு திறக்கப்பட்டு, வீட்டில் பீரோவில் வைத்திருந்த 2 1/2 பவுன் தங்க நகை களவாடப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சிடைந்தார். இது குறித்து வெள்ளியணை காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காக்காவாடி ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்த, செல்வராஜ் மகன் நாராயணன் என்கிற நாராயணமூர்த்தி வயது 27 என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்த போது, நவமணி வீட்டில் நகையை திருடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து நாராயணமூர்த்தியை வெள்ளியணை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Tags

Read MoreRead Less
Next Story