பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் 30 ஆயிரம் கொள்ளை

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து மூன்று பவுன் நகை 30 ஆயிரம் ரொக்கம் கொள்ளை
திருச்செங்கோட்டை அடுத்த சித்தாளந்தூர் அருகே உள்ள உலகப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (35) இவருக்கு மெர்லின் (30)என்ற மனைவியும். ஜோன்சி (10) செரியன் (3 ) இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.இவர் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். உணவகத்தை இவரது மனைவியும் இவரும் மட்டுமே கவனித்துக் கொள்வதால். வீட்டை பூட்டிவிட்டு ஓட்டல் கடையை கவனிக்க கணவனும் மனைவியும் காலையில் சென்று விட்டனர். இன்று காலை சுமார் 8.15 மணிக்கு தனது மகளை பள்ளிக்குஅழைத்துச் செல்ல வந்த மெர்லின் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்று விட்டார் காலை சுமார் 11 மணிக்கு ஓய்வு எடுக்க ஜஸ்டின் வீட்டுக்கு வந்த போது வீடு திறந்து கிடந்துள்ளது. இதனைக் கண்டு தனது மனைவி மெர்லினுக்கு போன் செய்து வீட்டை பூட்டாமல் சென்று விட்டாயா என கேட்டுள்ளார்வீட்டை பூட்டி விட்டு தான் வந்தேன் என மெர்லின் கூறியதை எடுத்து வீட்டிற்குள் சென்று ஜஸ்டின் பார்த்தபோது இடது பக்கத்து அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவை உடைத்து துணிகளை கலைத்து போட்டிருப்பது தெரிய வந்தது. பீரோவுக்குள் வைத்திருந்த ரூ 30,000 ரொக்க பணம் மற்றும் இரண்டு பவுனில் தங்கச்செயின் ஒரு பவுனில் செயின் என மூன்று பவுன் நகைகள் களவு போயிருப்பது தெரிய வந்தது. உடனடியாக இதுகுறித்து ஊரக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். எப்பொழுதும் போக்குவரத்து உள்ள ஜனன நடமாட்டம் உள்ள பகுதியில் காலை 10 மணி வரை அருகில் ஒரு பால் கடை இருந்த நிலையில் பட்ட பகலில் பூட்டிய வீட்டின் கதவுகளை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பது சித்தாளந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Tags

Next Story