நிர்பையாவை போல் இளம்பெண்ணிற்கு ஓடும் பேருந்தில் நடந்த கொடூரம் - மிருகமாக மாறிய ஓட்டுநர் கைது!

நிர்பையாவை போல் இளம்பெண்ணிற்கு ஓடும் பேருந்தில் நடந்த கொடூரம் - மிருகமாக மாறிய ஓட்டுநர் கைது!
Gang Rape
நிர்பையாவை போல் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணை ஓட்டுநர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.

தலைநகர் டெல்லியில் 2012ம் ஆண்டு தனது ஆண் நண்பருடன் சென்ற நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினார். பின்னர் ஓடும் பேருந்தில் இருந்து அந்த மாணவி தூக்கி வீசப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நிர்பையாவுக்கு நடந்த கொடூரத்தை போன்று ராஜஸ்தான் மாநிலத்தில் மற்றொரு கொடூரம் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த 19வயது இளம்பெண், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சென்றுள்ளார். தனது மாமாவின் வீட்டிற்கு செல்வதற்காக டிசம்பர் 9ம் தேதி மாலை 7.30 மனிக்கு பேருந்தில் ஏறியுள்ளார். தனக்கு தையல் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியதால் ஜெய்ப்பூருக்கு சென்றுள்ளார்.

பேருந்தில் அமர இருக்கை இல்லாததால், அந்த பெண்ணை கேபினில் ஓட்டுநர்கள் அமர வைத்துள்ளனர். பேருந்தில் இருந்து பாதி பயணிகள் இறங்கிய நிலையில் நள்ளிரவில் அந்த பெண் கேபினில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது இளம்பெண்ணை பார்த்த இரு ஓட்டுநர்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். அந்த பெண்ணின் அலறியதால் வெளியே தெரியக்கூடாது என்பதால், கேபினில் இருந்த இசையை ஓட்டுநர்கள் ஒலிக்கவிட்டுள்ளனர்.

பேருந்துக்குள் சவுண்டு அதிகம் வந்ததால் சந்தேகமடைந்த பயணிகள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்ணை மீட்ட பயணிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் ஓட்டுநரை சரமாரியாக தாக்கினர். அதில் ஒருவர் தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், பிடிப்பட்ட ஓட்டுநரை சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆணையர் பூல்சந்த் மீனா, கூட்டு பாலியல் வன்கொடுமை பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். இளம்பெண்ணை சீரழித்த புகாரில் ஆரிப் கான் என்ற ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளான். தப்பி ஓடிய மற்றொரு ஓட்டுநரான லலிதை தேடி வருகிறோம். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

Tags

Next Story