கடன் தொல்லையால் தொழில் அதிபர் தற்கொலை - 3 பேர் கைது

கடன் தொல்லையால் தொழில் அதிபர் தற்கொலை -  3 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்கள் 

ஓசூர் அருகே அதிக வட்டி கேட்டு தொல்லை கொடுத்ததால் தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி தற்கொலை செய்து இறந்த சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர் அட்கோ காவல் நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட டிரான்ட் சிட்டி பகுதியில் வசித்த வந்த பாலசண்முகம் என்பவர் பாகலூர் ரோட்டில் ஜெயலட்சுமி அண்ட் கோ சிமெண்ட் , ஸ்டீல் மற்றும் பெயிண்ட் கடை கடந்த 30 வருடங்களாக நடத்தி வந்துள்ளார். பால சண்முகம் வியாபார ரீதியாக பல நபர்களிடம் கடன் பெற்று செலுத்தி வந்துள்ளார்.

அதுபோலவே பாலகிருஷ்ணன் (43), சத்தியநாராயணன் (54 ),வெங்கடஜலபதி (32) ஆகியோரிடம் சுமார் ரூ. 21 இலட்சம் கடன் பெற்றுள்ளார். கடனுக்கு அதிக வட்டி கேட்டு தொந்தரவு செய்தும் வட்டி பணம் கொடுக்கவில்லை என்றால் தொலைத்து விடுவோம் எனவும் அவர்கள் மிரட்டியதால் பாலசண்முகம் மற்றும் அவரது மனைவி சுகந்தி ஆகிய இருவரும் மனஉளைச்சல் ஏற்பட்டு கடந்த 28-ம் தேதி விஷ மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த 1ம் தேதி அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதையடுத்து அட்கோ காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் பாலசண்முகம் மற்றும் அவரது மனைவி கடன் கொடுத்தவர்கள் கொடுத்த பணத்தை கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் அதிக வட்டி பணம் கேட்டு தொந்தரவு மற்றும் மிரட்டல் விடுவித்து தற்கொலைக்கு தூண்டியதற்காக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story