பாபநாசம் அருகே கார் மரத்தில் மோதி விபத்து: டிரைவர் பலி

பாபநாசம் அருகே கார் மரத்தில் மோதி விபத்து:  டிரைவர் பலி

கோப்பு படம் 

பாபநாசம் அருகே கோவிலுக்கு சென்று ஊர் திரும்பும் பொழுது சொகுசு காரின் டயர் வெடித்து மரத்தில் மோதி விபத்து கார் டிரைவர் பலியானர்.

திருச்சி மாவட்டம், லால்குடி பின்னியம் பகுதியை சேர்ந்த உறவினர்கள் 5 பேர் சொந்தக்காரில் திருநள்ளாறு, சனீஸ்வரன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் லால்குடிக்கு செல்லும் பொழுது பாபநாசம் அருகே உள்ள வடசருக்கை மெயின் ரோட்டில் எதிர்பாராத விதமாக காரின் முன் புற டயர் வெடித்ததில் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பனை மரத்தில் மோதியது.

இதில் கார் ஓட்டுநர் லால்குடி பின்னியம் செந்தில் மகன் ஆதவன் வயது 24 என்பவர்க்கு பலத்த காயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாமா இறந்தார். மேலும் காரில் பயணம் செய்த லால்குடி பின்னியம் பிச்சைபிள்ளை மகன் அருண்குமார் வயது 24 ,மகள் சிந்து வயது 21, மனைவி முத்தம்மாள் வயது 56, வேலவந்தான் தான் மகன் தமிழ் வயது 23, ஆகிய நான்கு பேர்களும் உயிர்க்கு ஆபத்தான நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், முருகதாஸ், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

Tags

Next Story